top of page

Values-In-Action 2024

photo_6336775833938677135_y.jpg

NTU Tamil Literary Society's active engagement with Sri Narayana Mission in 2024 underscored their commitment to promoting community engagement. Through collaborative efforts, they enhanced the event with discussions, games and a trip down memory lane. The interactions between students and senior members not only enriched the event but also facilitated meaningful exchanges of experiences. Overall, it was an eventful day spent with the elderly residents of Sree Narayana Mission.

தொண்டூழியத்தின் முக்கியத்துவத்தை அறிந்த NTU தமிழ் இலக்கிய மன்றம், 2024-ஆம் ஆண்டில், ஸ்ரீ நாராயணா மிஷன் எனும் அறநிறுவனத்தில் இருக்கும் முதியவர்களுக்கு உதவும் வகையில் தொண்டூழிய நடவடிக்கையில் ஈடுபட்டது.

 

மன்றத்தின் நலன் பராமரிப்பு மற்றும் தளவாடங்கள் குழு இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. குழு உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீ நாராயணா மிஷன்-க்கு சென்று, அங்கிருந்த முதியவர்களுடன் 

நேரத்தைச் செலவழித்தார். 

 

அவர்களுடன் சிறு எளிய விளையாட்டுகளை விளையாடியதோடு, அவர்களோடு உரையாடி மகிழ்ந்தனர். விளையாட்டுகள் அனைத்தும் முதியவர்கள் விளையாடுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் ஏதுவாக அமைக்கப்பட்டிருந்தன. மேலும், அவர்களுடன் பேசும்பொழுது முதியவர்கள் தங்கள் உணர்வுகளை மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டு மனத் திருப்தி அடைய ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

 

நடவடிக்கையின் முடிவில் குழு உறுப்பினர்கள் அங்கிருந்த முதியவர்களுக்கு அன்பளிப்பு பைகளை வழங்கினர். முதியவர்களுடன் சேர்ந்து பழகி அவர்களை மகிழ்வித்து விளையாட்டுகளில் பங்கேற்க வைத்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததாகக் குழுவினர் தெரிவித்தனர். 

 

தொண்டூழிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் மனநிறைவு பெறலாம் என்று நம்புகிறோம். 

Project Directors: Thurga and Aarthi
Committee Members: Pira, Yashwanth, and Kajol

Volunteers: Faizan,Sanjana, Mithran, Kamini, Nivethitha, Emerson

Picture12.jpg
Pic 9.jpg
Pic 11.jpg
Pic 1.jpg
image-removebg-preview (1)_edited_edited
  • Instagram
  • Facebook
  • Youtube
  • TikTok

Nanyang Technological University
Tamil Literary Society
50 Nanyang Avenue, S639798

© Copyright 2024 NTU Tamil Literary Society

bottom of page