Vaanga Pazhagalaam 2023

NTU TLS’ “Vaanga Pazhagalaam” 2023 was conducted on 26th August. This year’s theme was “Ponniyin Selvan”, with an adapted storyline. Station games, aligning with the theme, were played. The goal was to identify the killer of Adhitya Karikalan through the clues and trailer videos provided in the station games. A sub committee sharing session was conducted at the end of the games, for prospective TLS members to be able to make better decisions about which committee to join. This was a highly successful event with around 100 participants.

NTU தமிழ் இலக்கிய மன்றத்தின் 14-ஆம் செயற்குழுவின் "வாங்க பழகலாம்" எனும் அறிமுக நி கழ்வு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி அன்று நடந்தது. நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் இந்நிகழ்வில் பங்குபெற்று, NTU TLS பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டனர். அனைவரின் மனதிலும் இடம் பிடித்த “பொன்னியின் செல்வன்” கதையை மையமாக கொண்டு, ஒரு கற்பனை வடிவத்தில் அதை கருப்பொருளாக கொண்டு விளையாட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.

"ஆதித்த கரிகாலனை கொன்றது யார்?" இக்கேள்விக்கு விடையை கண்டறியும் துப்பறிவாளர்களாக, மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு, விளையாட்டுகளை விளையாடினர். "சின்னங்களின் வேட்டை" எனும் கடைசி விளையாட்டில், குழுக்கள் பெரும்பாலான சோழ மற்றும் பாண்டிய சின்னங்களையும் குறியீடுகளையும் கண்டு பிடித்தால் அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் பெறப்படும் என்பதால், அனைவரும் இதில் அதீத ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
வெவ்வேறு நிலையங்களில், விளையாட்டின் முடிவில், சில முக்கிய குறிப்புகள் வழங்கப்பட்டன. அவற்றை வைத்துதான் அவர்கள் ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்று கண்டு பிடிக்க வேண்டும். கூடுதலாக, சில முன்னோட்ட காட்சிகளும் குறிப்புகளாக காட்டப்பட்டன. ஆக அதிக புள்ளிகளை பெற்ற அணியினர் வெற்றி வாகை சூடினர். இவ்வாண்டின் நிகழ்வில், முதன் முறையாக, ஒவ்வொரு துணை குழு தலைவர்களும், அவரவர் குழுவை பற்றிய விவரங்களை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். வருங்கால மன்ற உறுப்பினர்களுக்கு, அவர்கள் எந்த துணை குழுவில் சேரலாம் என்று முடிவெடுப்பதற்கு அப்பகிர்வு உதவியாக அமைந்தது. இவ்வாண்டின் “வாங்க பழகலாம்” நிகழ்வு இனிதே நடைபெற்றது.

Organizing Committee: Valliappan, Hemanth, Muru Siva, Vignesh, Shruthika, Shree, Muhsin, Akash, Kajol, Nivetha, Pooja, Nandini, Jeevika, Vaishnavi, Sanjana, Rishe, Kirthika, Shayanthaviy