Sports Bonding Day 2023

The Sports bonding Day featured participants grouped into teams named after popular movies, adding a fun twist to the event. Each group engaged in a range of sports activities, creating a competitive yet enjoyable environment. Winners were recognized with trophies and commendations, enhancing the overall excitement and spirit of the day.
விளையாட்டு பிணைப்பு தினத்தன்று மன்ற உறுப்பினர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். விளையாட்டுகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களின் பெயர்கள் குழுக்களின் பெயர்களாக அறிவிக்கப்பட்டன (உதாரணத்துக்கு சார்பட்டா பரம்பரை, பிகில்). விளையாட்டு பிணைப்பு தினத்தின் செயற்குழுவினர் வெவ்வேறு சுவாரசியமான விளையாட்டுகளைத் தயார்செய்திருந்தனர். ஒவ்வொரு விளையாட்டிலும் இரு குழுக்களாக மோதி, வெற்றி பெற்ற குழுவினருக்கு மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டன. வெயில் என்று கூட பாராமல் ஓடி ஆடி விளையாடிக் களைத்துப் போனதால் அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.
அனைத்து போட்டிகளும் முடிவடைந்த பிறகு அதிக மதிப்பெண்கள் பெற்ற குழுவினர் வெற்றி வாகை சூடினார். அவர்களுக்கு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டதோடு, சிறு அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன. சிறப்பு விருதுகளாக, சிறந்த பெண் மற்றும் சிறந்த ஆண் போட்டியாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. இறுதியாக, அனைவரும் ஒரு குழு புகைப்படத்தை எடுத்துவிட்டு விடைபெற்றனர். வெயிலில் விளையாடிக் களைத்திருந்தாலும் கூட, தேர்வுகளுக்குப் பின் நடந்த முதல் நிகழ்வு மகிழ்ச்சியாக அமைந்தது.


Project Directors: Muhsin and Abarna
Committee Members: Goutham, Sri Sanjana, Abishak T, Shanmadhy, Nivethitha, Manasarow, Harish, Ooviya, Mithran, Kamini