
உனக்கு விலங்குகள் பிடிக்கும் அல்லவா?
B Natish Vel
NTU Civil Engineering Student
Submission for June Kathaikalam 2018
குழலி அவளது வீட்டின் சாலையோரமாக அமர்ந்திருந்தாள். எங்கே இந்த பிரவீன்? அவன் வந்துவிட்டான் என்று சொன்னானே. அப்போது ராஜி அங்கு வந்தாள்.
“ராஜி! உன்னைப் பார்த்து இரு வாரங்கள் ஆகிவிட்டன,” என்று குழலி சந்தோஷத்துடன் சொன்னாள்.
ராஜியும் ஒன்றும் கூராமல் குழலியின் பக்கத்தில் அமர்ந்து அவளது கையை சிறுபிள்ளையைப்போல பிடித்தாள். குழலி அவளது பத்து வயது தோழியின் தலையை உரசினாள்.
பிரவீனின் மோட்டார் சைக்கிளின் சத்தம் முரசொளித்தது. குழலியின் வருங்கால கனவர் வந்துவிட்டார்! தங்கள் இருவருக்குமே சிறுது இடைவேளி தேவை என ராஜி சோகத்தோடு உணர்ந்தாள். அவள் மெதுவாக எழுந்து, குழலியின் கேள்விகளை தவிர்த்து, அங்கிறுந்து சென்றாள்.
“பத்து நிமிஷமா இங்கு காத்திருக்கிறேன்”, என்றாள் குழலி.
“சரி வா, நாம பக்கத்து ஏரிக்கு போகலாம்,” என்றான் பிரவீன். குழலி அவளது தலையை ஆட்டி மோட்டார் சைக்கிளில் ஏரிகோண்டாள். சிறிது நேரத்தில் அங்கு சென்றடைந்ததும் இருவரும் ஒரு மரத்தடியே அமர்ந்தன.
“குழலி, உனக்கு விலங்குகள் பிடிக்கும் அல்லவா?” பிரவீன் கேட்டான்.
“ஆமாம். எனக்கு…”, குழலி ஆரம்பித்தும் பிரவீன் தோடற்ந்து பேசினான்.
“அதனால் நான் ஒரு புது நாய்குட்டியை வாங்கியிருக்கிறேன்! எப்போதுமே குரைச்சிகிகுட்டே இடுக்கும்!”
“நாய்கள் மிகவும் குரும்பு, அவை மனிதர்களுக்கு விசுவாசமானவை பிரவீன் ”
“ஏதோ, அது உனக்கு பிடிக்குமல்லவா? இது வாங்கியது…”
“நான் பல தடவை சொல்லியிருக்கிறேன், ஒரு செல்லப் பிராணியை வாங்கக்கூடாது. விற்பவர்கள் இந்த பிஞ்சு விலங்குகளை மோசமான நிலைகளில் வைத்து, பணத்திற்காக வேதனைபடுத்துவர். வேண்டுமானால் ‘எஸ்பிசிஏ’ விடுதிகளிருந்து விலங்குகலை தத்தெடுப்பதே எல்லோருக்கும் நல்லது!” என்று குழலி கண்டித்தாள்.
“நான் அதை கடையில பார்த்தேன், அது பார்கிறதுக்கு பாவமா இருந்தது, வாங்கிவிட்டேன். அது தப்பா? ”
குழலி ஒன்ரும் கூராமல் கைகளை மடித்துக்கொண்டாள். அவள் கோபமாக இருப்பதை அவன் உனர்ந்தான்.
“சரி, உனக்கு எந்த விலங்கு பிடிக்கும்?”
குழலி ‘பூனை’ என்றாள்.
பிரவீன் சிரிக்க ஆரம்பித்தான்.
“உனக்கு அசிங்கமான பூனைகள் பிடிக்குமா?”
“அவை நாய்கள் போல அல்ல, அவர்களின் நம்பிக்கையை முதலில் பெற்றுகொள்ளவேண்டும்!”
“அவர்களா? அந்த மிருகம் கண்டாலே எனக்கு பிடிக்காது. ஆத்திரம் வந்தால் அதை எத்திவிடுவேன்! சென்ற வாரம்கூட…”
குழலி கேட்டதை நம்பமுடியவில்லை. அவளது அன்பான காதலன் அப்பாவி பூனைகளையை கொடுமைப்டுத்துபவரா?
“நீயா அப்படி செய்தாய்! அது எவ்வளவு பெரிய தவறு!”
பிரவீன் தன் தவறை ஒப்புக்கொள்ளவில்லை.
“அது வெரும் பூனைதான். சிறு வயதில் ஒரு பூனை என்னை சொரிந்துவிட்டது.”
“அதனால் பூனைகளை தாக்குவது சரியா?” என்று கத்தி குழலி அங்கிறுந்து விளகி செல்ல ஆரம்பித்தாள்.
“குழலி, என்னை மன்னித்துவிடு…”
குழலி வீட்டிற்கு ஓடிச்சென்றாள். சிறிது நேரம் அவள் வெளியே உட்கார்ந்து அழும்போது அங்கு ராஜி மறுபடியும் வந்தாள். அவள் குழலியின் மடியில் பாய்ந்து அமர்ந்தாள்.
குழலி ராஜியை கண்டதும் அழுவையை நிருத்தினாள். எவ்வலவு சோகமாக இருந்தாலும் இந்த பூனை அவளை எப்போதும் சந்தோஷபடுத்திவிடும். அதை நெறுக்கி கட்டிபிடித்தாள். என்னை விட்டுசெல்லாதே ராஜி, என்று சொன்னாள்.