top of page
Frozen Popsicles

அவர்களுக்காக

Diviyah Krishnan
NTU Material Science Student
2nd Prize for June Kathaikalam Submission 2018

அவள் செய்வது தவறு என்று அவளது மூளை நன்கு அறியும்; ஆனால் இதை விட சிறந்த வழி வேறெதுவும் இல்லை என்று அவளது இதயம் அவளை சமாதானப்படுத்தியது.

விழிகளிருந்தும் கண்ணீர் நீருற்றி போல வழிந்தோட, அவள் சமையலறைக்குச் சென்றாள்.

அழுது அழுது அவளது உடம்பில் சக்தி இல்லாமல் போய்விட்டது. இருப்பினும், அவளது இதயமும் மூளையும் மேலும் சண்டையிட்டன; போரடின. தனது முடிவை தான் மாற்றிக்கொள்வோமோ என்ற பீதி ஒரு பக்கமும், முடிவை எப்படியாவது மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஒரு பக்கமுடனும் அவள் தள்ளாடினாள். கண்ணீர் துளிகளோடு சேர்ந்து வியர்வை மொட்டுகளும் வழிந்தோடியன. விழிகளை இறுக்கமாக மூடிக்கொண்டாள்; இந்த நிலமைக்கு அவளை ஆளாக்கிய சம்பவங்களை தனது  மூடிய  விழிகளில் கண்டாள்........

கிருஷ்ணா, அவளின் தந்தை. ராதா, அவளது தாய். பெயர் பொருத்தத்தைவிட, ஜோடி பொருத்தம் அற்புதமாக இருக்கிறது என்று ஊரை கூறும்; அவைளும் கண்முடித்தனமாக கருதினாள்.

எவ்வளவு காதல் பறவைகள் இருந்தாலும் அவள் ரசித்தது அவளின் பெற்றோர்களைத்தான். அவ்விருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்துக்கொள்வதை அவள் ரசித்தாள்; எப்படி ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் ஆதரவாக இருந்தனர் என்பதையும் கண்டு  பூரிப்பு அடைவாள். இவ்வாறு அன்போடு கலந்த அவளது குடும்பம் சண்டையும் சச்சரவும் கலந்த உறவுகளாக மாறிவருவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வேடிக்கையாக தங்களுக்குள்ளே குட்டியான  சண்டையிட்ட அவளது பெற்றோர்கள், பெரிதான சண்டையில் ஈடுபட்டனர்; சண்டை வன்முறையிலும் முடிகிறது. இவையெல்லாம் பிரம்மையாக இருக்கக்கூடாதா என்று அவள் ஏங்காத நோடிகளே இல்லை. மனதளவில் பிரிந்துகொண்ட பெற்றோர்களை சேர்த்து கோர்க்க வேண்டும் என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். அலறினாள்; கதறினாள்; எதுவும் வேலைக்காகவில்லை.

நாட்கள் கடந்தோடின; சண்டையும் விரைவாக வளர்ந்தன. என்ன செய்வது ஏது செய்வது என்று அறியாமல் அவள் தத்தளித்த போது பெற்றோர்கள் விவாகரத்திற்கு ஏற்பாடு செய்தனர். விவாகத்தில் மலர்ந்த உறவு விவாதத்தால் விவாகரத்தில் முடிகிறதை அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஏதாவது செய்து விவாகரத்தை தடுக்க வேண்டும் என்று அவள் கிளர்ச்சிகரமாக அலைந்தாள்.

வேதனையோடு அலைந்த அவளை சூழ்நிலை  தீவிர முடிவிற்கு அழைத்துச்சென்றது. எங்கே தனக்கு காயம் ஏற்பட்டால் அவளை குணமாக்கும் முயற்சியில் பெற்றோர்கள் கை சேர்ப்பார்கள் என்று அவள் நம்பினாள்.

தனது முடிவில் வலுவாக இருந்தவாறு, விழிகளை திறந்து, தென்பட்ட கத்தியை எடுத்து மணிக்கட்டையை அருத்தினாள். ஆழ்ந்த வலியை அவள் உணர்ந்தாள். வலியைவிட, இதனால் பெற்றோர்கள் சேர்வார்கள் என்ற ஆறுதல் அதிகமாக இருந்தவாறு மயங்கி விழுந்தாள்.

கண்விழித்துப்பார்த்தாள். மருத்துவமனையில் தனக்கு முன்னாடி பெற்றோர்கள் அழுதுகொண்டிருந்தன. தான் கண்விழித்ததை அறிந்துக்கொண்ட பெற்றோர்கள் ஒரே நேரத்தில் அவளது நெற்றியில் முத்தம் கொடுத்தனர். ஒற்றுமையைக் கண்டு அவள் தனது திட்டம் வெற்றிக்கரமாக முடிகிறது என்று நினைத்து குளிர்ச்சி அடைந்தாள். ஆனால்.....

"உன்னால்தான் நமது மகள் இந்நிலைக்கு ஆளாக்கினாள்!, என்று ஒருவருக்கொருவர் தனது பெற்றோர்கள் பழி சுமத்தி சண்டையிட்டனர்.

தங்கள் இருவருக்குமே சிறிது இடைவெளி தேவை என அவள் அப்போதுதான் சோகத்தோடு உணர்ந்தவாறு விழிகளை மூடினாள்.

image-removebg-preview (1)_edited_edited
  • Instagram
  • Facebook
  • Youtube
  • TikTok

Nanyang Technological University
Tamil Literary Society
50 Nanyang Avenue, S639798

© Copyright 2024 NTU Tamil Literary Society

bottom of page