top of page

Tri-Uni Pongal 2024

20240127_094641378_iOS.jpg

NTU Tamil Literary Society organized the "Adhiradi Pongal 2024" event, which brought together students from various tamil university organisations including Tamizha and NUS TLS. This event provided students with a platform to showcase their talents and share knowledge. It featured a variety of cultural performances and activities, celebrating Pongal and promoting traditional arts among youth. The event commenced with a short play depicting the significance of Pongal over four days, engaging young minds in exploring the richness of Tamil culture. Participants engaged in various games and activities related to Pongal, enhancing their understanding of the festival's traditions. The event also included musical performances, cultural dances, and theatrical presentations, showcasing the vibrancy of Tamil arts and culture. Overall, around 160 students actively participated in the event, contributing to its success and fostering cultural exchange and celebration.

20240127_121744536_iOS.heic
20240127_023836709_iOS.jpg
20240127_133422294_iOS.jpg
20240127_034258862_iOS.jpg
20240127_093115224_iOS.jpg

முப்பால், முக்கனி, முத்தமிழ், இவ்வரிசையில், 
முப்பல்கலைக்கழகங்கள் இணைந்து கொண்டாடிய 'அதிரடி பொங்கல் 2024' நிகழ்ச்சியை நடத்தியது NTU தமிழ் இலக்கிய மன்றம். தமிழா மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தமிழ் பேரவை சேர்ந்த மாணவர்கள் அதில் பங்கேற்று, NTU  TLS மாணவர்களுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடினர். 

இந்நிகழ்வு மாணவர்களுக்கு ஒரு கோலாகலமான கொண்டாட்டமாக அமைந்தது. மாணவர்களே மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் வாய்ப்பை இந்நிகழ்ச்சி வழங்கியது. நிகழ்ச்சியில் பல குழு விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பொங்கல் பண்டிகையை ஒட்டி மாணவர்களுக்குத் தகவல்களைக் கற்றுக்கொடுக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு விளையாட்டும் அமைக்கப்பட்டிருந்தது. 

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், பொங்கல் பண்டிகையின் நான்கு தினங்களைப் பற்றிச் சொல்லும் வகையில் ஒரு சிறிய மேடை நாடகம் அரங்கேறியது. இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், திரையுலக கதாபாத்திரங்களின் வழி 
அந்நாடகாதில் பொங்கல் பண்டிகை விவரிக்கப்பட்டது. 

கொண்டாட்டத்தில், தமிழர் விளையாட்டுகள், பொங்கலைக் 
கருப்பொருளாகக் கொண்டு இடம்பெற்றதோடு, ஒரு இசை நிகழ்ச்சியும் NTU  TLS - ன் இசைக்குழுவினரால் நடத்தப்பட்டது. மேலும், 'தமிழா' குழுவும், NUS TLS - ன் நடன குழுவும் தங்கள் நடன நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியின் இறுதியில், NTU TLS - ன் நடன குழு ஒரு உற்சாகமான நடன படைப்பை மேடையேற்றியது. 

கொண்டாட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், பொங்கலைப் பற்றி சுவாரசியமான முறைகளில் கற்றுக்கொண்டதோடு, தங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இதில் பங்கேற்றனர். கொண்டாட்டத்தில் சுமார் 160 மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 'அதிரடி பொங்கல் 2024' வெற்றிகரமாக நடந்தேறியது.

Project Directors: Abishak and Ashwini
Committee Members: Sreenithi, Aravind, Divya, Abarna, Krisha, Sanjay, Natalia, Shakthi, Rathi, Nivethitha, Veeru, Gayathri, Nivetha, Priya, Faizan, Valliappan, Haroon, Chandru

20240127_121938622_iOS.heic
image-removebg-preview (1)_edited_edited
  • Instagram
  • Facebook
  • Youtube
  • TikTok

Nanyang Technological University
Tamil Literary Society
50 Nanyang Avenue, S639798

© Copyright 2024 NTU Tamil Literary Society

bottom of page