Kuriyeedu Vilaiyadu 2019

Coding is becoming an essential skill in today's advanced world. With the increasing influx of technology in our lives, it is important for the Tamil language to keep up with the changing technology. This is why the Tech Wing of the NTU Tamil Literary Society and the Tamil Language Learning and Promotion Committee (TLLPC) initiated this event, Kuriyeedu Vilayaadu – A computational thinking and game designing workshop.
More than 30 Primary 5 students attended the workshop on June 6th and 7th, 2019 at Umar Pulavar Tamil Language Centre. Mr. Ravi Suppiah of NUS School of Computing facilitated the workshop by teaching the students how to create their own game using a programming language, Scratch. Although some students found it difficult to understand the programming initially, with the help of our members as facilitators, they learned the coding language and created their own game. The students also created some games relating to Tamil with the use of Thirukkural, Aathichudi, etc. Upon creating their own game, the students showed a special interest in playing the game and sharing it with their friends!
In the second day of the workshop, students were given the opportunity to learn robot programming using mBot. The students as teams of three tried to code for the mBot with the programming knowledge based on Scratch.Following that, the parents of the students were invited to the workshop to see the games created by their children. Most parents were thrilled to see their children, who had little experience in coding, creating a game with it.
This game design workshop based on Scratch programme ended successfully by equipping the students with some programming knowledge and guiding them on how to apply those coding skills.








தொழில்நுட்பம் தொடர்ந்த மேம்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் குறியீடு (Coding) என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு திறனாக மாறிவருகிறது! குறிப்பாக தொண்மைவாய்ந்த நம் தமிழ் மொழி வளர, வளம்பெற இதுபோன்ற தொழில்நுட்பத்தின் பயன்பாடு மிகவும் முக்கியமாகும். எனவேதான் NTU தமிழ் இலக்கிய மன்றத்தின் தொழில்நுட்ப பிரிவு இந்த வருடம் தமிழ்மொழி கற்றல் மற்றும் வளர்ச்சி குழுவுடன் சேர்ந்து இந்த முயற்சியை ஏற்பாடு செய்தது.
முப்பதுக்கும் மேற்பட்ட தொடக்கநிலை ஐந்தாம் பிரிவை சேர்ந்த மாணவர்கள் June 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் இந்த நிகழ்ச்சிக்கு கூடியிருந்தனர். அவர்களுக்கு மிக சுவாரஸ்யமான வகையில் NUS School of Computing - ஐ சேர்ந்த திரு ரவி சுப்பையா அவர்கள் எப்படி ஸ்கிராட்ச் (Scratch) என்ற ஒரு நிரலாக்க மொழியை பயன்படுத்தி எப்படி இணையத்தில் ஒரு விளையாட்டை உருவாக்கலாம் என்பதை கற்றுக்கொடுத்தார்.
ஆரம்பத்தில் விஷயத்தை புரிந்துகொள்ள சில மாணவர்கள் சிரமப்பட் டாலும், எங்கள் மன்ற மாணவர்களின் உதவியால் அனைவரும் இந்த நிர்லாக்க மொழியை கற்றுக்கொண்டு தங்கள் சொந்த விளையாட்டை உருவாக்கினர். திருக்குறள், பாரதியார் என்று தமிழ் தொடர்பான சில விளையாட்டுகளையும் மாணவர்கள் உருவாக்கியிருந்தனர். அதோடு, அந்த விளையாட்டை விளையாடுவதிலும் அவற்றை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் தனி ஆர்வத்தை காட்டினார் மாணவர்கள்!
இதோடு நிறுத்திவிடாமல், அடுத்த நிலைக்கு இந்த ஆர்வத்தை எடுத்து செல்லும் வண்ணம், மாணவர்களுக்கு சில இயந்திர மனிதர்களும் கொடுக்கப்பட்டனர். இந்த இயந்திர மனிதர்கள் "scratch" நிரலாக்க மொழி போன்ற மற்றொரு மொழியை பயன்படுத்தி இயக்கவேண்டும். எனவே, தாங்கள் கற்றதை பயன்படுத்தி இயந்திரத்தை இயக்க மாணவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு முயற்சி செய்தனர்.
இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளன்று மாணவர்களின் பெற்றோர்களும் இந்த நிகழ்ச்சிக்கு வந்து தங்கள் பிள்ளைகளின் படைப்புகளை கண்டார்கள். குறியீடு செய்வதில் சிறிதும் அனுபவம் இல்லாத தங்கள் பிள்ளைகள், அதைக்கொண்டு ஒரு விளையாட்டை உருவாக்கியதைக் கண்டு பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இப்படியே நல்லபடியாக நிகழ்ச்சி ஒரு நிறைவுக்கு வந்தது. திரு ரவி சுப்பையா அவர்கள், பிள்ளைகள் இன்றோடு நின்றுவிடாமல் தொடர்ந்து தங்கள் குறியீடு திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறியபடி நிகழ்ச்சியை முடித்துவைத்தார்.
Project Director:
Mohamed Nijamudeen
Tharsiny Balakrishnan
Check out photos from:
https://www.facebook.com/pg/NTUTamilLiterarySociety/photos/?tab=album&album_id=2088055271322156