First General Meeting 2023

The 1st General Meeting of NTU TLS’ 14th Committee was conducted on 15th September 2023. Following the introduction of the 14th Executive and Main Committees, the work plan for the year and the expectations of the 14th Committee were shared. Membership fee was inaugurated this year, encouraging members’ commitment to the society, and providing them with a year of good welfare. Subcommittee members discovered their subcommittees with a Harry Potter “Sorting Hat” theme. The WeLogs Committee conducted fun games to strengthen the bonds among everyone. A special celebration took place for members who celebrated their birthdays from July to September.



தமிழ் இலக்கிய மன்றத்தின் 14 ஆம் குழுவின் முதல் பொதுக்கூட்டம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இவ்வாண்டின் தலைமை மற்றும் முதன்மை குழுக்களின் உறுப்பினர்களை அறிமுகப்படுத்தியபின், மன்ற தலைவர் இவ்வாண்டின் வேலை திட்டத்திற்கான கால அட்டவணையை விவரித்தார். இவ்வாண்டில் தான் முதன் முதலில் "உறுப்பினர் கட்டணம்" அறிமுகப்படுத்தப்பட்டது. உறுப்பினர்கள் அவர்களுடைய வேலைகளை கூடுதல் பொறுப்புடன் செய்வதற்கும், ஆண்டு முழுவதும் அவர்களுடைய நலன் பராமரிப்பதற்கும் உதவுவதே இதன் நோக்கம். 14 ஆம் குழுவின் உறுப்பினர்களின் செயல்பாட்டின் எதிர்பார்ப்புகள் பகிரப்பட்டதோடு, துணை குழு உறுப்பினர்கள் அவரவர் குழுக்களை ஹாரி போட்டர் கதையில் வரும் "சோர்ட்டிங் ஹாட்" (“Sorting Hat”) எனும் கருப்பொருள் கொண்டு அறிந்தனர். நலன் பராமரிப்பு மற்றும் தளவாடங்கள் குழு தலைவர்கள் சில உற்சாகமான விளையாட்டுகளை உறுப்பினர்களுக்காக வழிநடத்தினர். உறுப்பினர்களின் பிணைப்பை வலுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுக்கூட்டத்தின் முடிவில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை பிறந்தநாள் கொண்டாடும் உறுப்பினர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. முதல் பொதுக்கூட்டம் மகிழ்ச்சியான நிலையில் நிறைவுபெற்றது.





