top of page

14th EXCO Elections

EOSR1839.jpg

In a momentous occasion marking the commencement of a new chapter in the journey of TLS, the entire TLS gathered in one place to elect its 14th Executive Committee (EXCO). The candidates running for the various EXCO positions exhibited unwavering dedication and rallying to address the challenging questions posed by TLS members. We extend our congratulations to the newly elected EXCO for their resounding victory and we believe they would steer TLS to new horizons. 

"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு", என்ற நம் மன்றத்தின் மக்களாட்சிச் சிறப்பைப் பறைசாற்றிய நாளாக அமைந்தது 18 ஆகஸ்ட் 2023 அன்று நடைபெற்ற 14 ஆம் தலைமைக்குழுவிற்கான தேர்தல். இத்தேர்தலில் களமிறங்கிய அனைத்து மாணவ வேட்பாளர்கள் தங்களின் சிந்தனைகளையும் திட்டங்களையும் பற்றி பரப்புரை செய்தனர். மேலும், மன்றத்தினர் எழுப்பிய கடினமான கேள்விகளுக்கு மறுமொழி அளித்தனர். இதனால் தேர்தல் களத்தில் கடும்போட்டி நிலவியது. இருப்பினும், மன்றத்தினர் பார்வைக்குத் தகுதி வாய்ந்தவர்களாகப் புலப்பட்ட வேட்பாளர்களே இந்தத் தேர்தலில் வெற்றிக்கனியைத் தட்டிச் சென்றனர். 

மன்றத்தின் மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வலுசேர்க்கும் விதமாகத் தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கும் வாக்களித்த உறுப்பினர்களுக்கும் தேர்தலைத் திறம்பட நடத்திய 13-ஆம் தலைமைக்குழுவுக்கும் எங்களின் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்! 

 

இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 14-ஆம் தலைமைக்குழுவின்  விவரங்கள் பின்வருமாறு:

 

President (தலைவர்): ம. சந்துருவேல்

Vice President (துணைத்தலைவர்): ஜ. கா. ஃபைஸான்

Treasurer (பொருளாளர்): வள்ளியப்பன் காசி 

Secretary (செயலாளர்): சிவசண்முக பிரியா

Chief Editor (தலைமைப் பதிப்பாசிரியர்): முஹம்மது  ஹாரூன்

image-removebg-preview (1)_edited_edited
  • Instagram
  • Facebook
  • Youtube
  • TikTok

Nanyang Technological University
Tamil Literary Society
50 Nanyang Avenue, S639798

© Copyright 2024 NTU Tamil Literary Society

bottom of page