Deepavali Bonding Day 2023

தீபாவளி பிணைப்பு தினத்தன்று சிறு சிறு குழுக்களாக பிரிக்க பட்டோம் .ஒவ்வொரு குழுக்களிலும் வெவ்வேறு துணைக்குழுவிலிருந்து நபர்கள் சேர்க்கப்பட்டனர். இசையமைப்பாளர்களின் பெயர்களை கலவை செய்து குழுக்களின் பெயர்கள் வழங்க பட்டன (உதாரணத்துக்கு மணிருத் ரவிச்சந்தர் , டி.ரஹ்மான்). பெயர்கள் சிறிய நகைச்சுவையான திருப்பதுடன் வழங்கப்பட்டன.
குழு அறிமுகங்களுடன் தொடங்கி, ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு சிறிய நினைவுப் பரிசு வழங்க பட்டது. ரவுண்ட் ராபின் சுற்று முறையில் மொத்தம் 5 நிலையங்கள் இருந்தன. நிலையங்களின் பெயர்கள்: வாழ்க்கை அளவுள்ள பல்லாங்குழி, விழுந்தா சாவு, கேரம், கபடி மற்றும் ஒரு நிமிடத்துக்குள் கண்மூடி சேலை கட்டுதல் போன்ற 5 வெவ்வேறு நிலையங்கள் இடம்பெற்றன. 3 நிலைய விளையாட்டுகள் மதிய உணவுக்கு முன் மற்றும் 2 மதிய உணவுக்குப் பிறகு விளையாடப்பட்டன. தமிழ் முரசு அவர்களின் செயலியை (app) எங்களிடம் அறிமுகமும் செய்தனர். உறுப்பினர்களின் அறிவை சோதிக்கவும் மேம்படுத்தவும் தீபாவளி பற்றிய 15 கேள்விகளைக் கொண்ட கஹூட் (Kahoot) விளையாட்டும் நடந்தது


For the Deepavali bonding day, all members of the NTU TLS were cordially invited to participate in the event. Even though it was in the midst of a busy season preparing for exams, all members were put through the hoops in a day of fun and games.

வணிகக் குழு பல்வேறு TLS குழுக்களின் சட்டை வடிவமைப்புகளுக்கான விளம்பரங்களைச் செய்தது. இறுதியில் பல விருதுகளும் வழங்கப்பட்டன. சிறந்த உடை அணிந்தவர், சிறந்த அணி மற்றும் சிறந்த உற்சாகமான அணி போன்ற விருதுகள் வழங்கப்பட்டன. எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் TLS நிகழ்ச்சிகளுக்கு பாரம்பரிய உடைகளை அணிய உறுப்பினர்களை ஊக்க ுவிக்கும் வகையில் சிறந்த ஆடை அணிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அதுமட்டுமல்லாமல், பங்கேற்பு சான்றிதழ்கள், கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் போன்ற தனித்துவமான பரிசுகள் வழங்கப்பட்டன. உறுப்பினர்கள் மறக்கமுடியாத தருணங்களைப் படம்பிடிக்க TLS புகைப்பட சாவடி முதல்முறையாக அமைக்கப்பட்டது. அதிக புள்ளிகளைப் பெற, இசை அமைப்பாளர் தொடர்பான 'பிங்கோஷீட்' (BINGOSHEET) அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் சில திரைப்படக் காட்சிகளை மீண்டும் உருவாக்குதல், விருதுகளுக்கான ஏற்பு உரையை மீண்டும் நிகழ்த்துதல் போன்றவை அதில் இருந்தது.
Organising Committee
Project Directors: Dhanusha and Shrutheeka
Committee Members:
Pinita, Rithika, Akshaya, Sreenithi, Sanjena, Dhurgha, Mithran, Kamini