Beach Bonding Day 2024

During Beach Bonding Day, participants were organized into small groups, named after marine creatures such as Nethili (anchovy) and Thangameen (goldfish). These teams engaged in diverse and strategic activities prepared for the occasion. Winners in each activity were rewarded points, creating a sense of achievement among the participants. Despite the beach's heat and sand, everyone enthusiastically joined in games and sports. The day's highlight included a lunch featuring pizza and cold drinks, followed by spirited games like Kabaddi. Afterward, participants continued to enjoy various sports, with the highest-scoring groups celebrating their success joyfully. Beach Bonding Day was a lively and memorable event, filled with camaraderie and excitement.



கடற்கரை பிணைப்பு தினத்தன்று மன்ற உறுப்பினர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். கடல் வாழ் உயிரினங்களின் பெயர்கள் குழுக்களின் பெயர்களாக அறிவிக்கப்பட்டன (உதாரணத்துக்கு நெத்திலி, தங்கமீன்). கடற்கரை பிணைப்பு தினத்தின் செயற்குழுவினர் வெவ்வேறு சுவாரசியமான விளையாட்டுகளைத் தயார்செய்திருந்தனர். ஒவ்வொரு விளையாட்டிலும் இரு குழுக்களாக மோதி, வெற்றி பெற்ற குழுவினருக்கு மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டன. கடல் மணலில் அனைத்து விளையாட்டுகளும் நடைபெற்ற போதிலும், வெயில் சூட்டையும் பாராமல், உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
மதிய உணவிற்கு 'Pizza' வழங்கப்பட்டது. களைப்பாக இருந்தவர்கள்
இளைப்பாறக் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. இடைவெளி நேரத்தில் ஆண்கள் அனைவரும் விறுவிறுப்பான 'கபடி' விளையாட்டில் ஈடுபட்டனர். மதிய உணவிற்குப் பின்னர் மீதி விளையாட்டுகளில் மாணவர்கள் பங்கேற்றனர்.
அனைத்து விளையாட்டுகளும் முடிவடைந்த பிறகு அதிக மதிப்பெண்கள் பெற்ற குழுவினர் வெற்றி வாகை சூடினார். அவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. இறுதியில், பலர் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர். இவ்வாண்டின் கடற்கரை பிணைப்பு தினம் மிகவும் ஆனந்தமான நிகழ்வாக அமைந்தது.
Project Directors: Nachammai and Tharani
Committee Members: Muru Siva, Preethi, Boojha, Pritika, Param, Karthik Adharsh, Andrea, Rethika, Fayaz, Mithran, Kamini