Annual General Meeting 2023

The Annual General Meeting was held on 30th September 2023 at the Nanyang Auditorium Foyer. This momentous occasion commemorates the outstanding efforts and contributions of the 13th committee and an instrumental milestone for the 14th Executive Committee to hone their elected leadership roles. The budget report of the 13th committee, unveiling the new NTU TLS logo and the work plan proposed by the 14th Committee were some of the important highlights of the event. The event was filled with laughter, games, and tasty food. Additionally, NTU TLS Alumni Association attendance enriched the joyous occasion with unforgettable memories.


NTU தமிழ் இலக்கிய மன்றத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் 30 செப்டம்பர் 2023 அன்று நன்யாங் அரங்கத்தில் நிகழ்ந்தது. மாற்றம் ஒன்றே மாறாதே, என்பத்தேற்ப ஒவ்வொரு ஆண்டும் மன்றத்தின் பொறுப்புகள் அடுத்த செயற்குழுவிற்கு ஒப்படைக்கபடும்.
புத்தாக்க சிந்தனையோடு பல முயற்சிகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய 13-ஆம் செயற்குழுவின் சாதனைகளைக் கோலகாலமாக கொண்டாடும் நாளாக அமைந்தது. மேன்மேலும், தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை வெற்றிகரமாகவும் ஆக்கப்பூர்வமான முறையில் சமுதாயத்திற்கு எடுத்து செல்ல
புதிதகாக நியமிக்கப்பட்ட 14-ஆம் செயற்குழுவிற்கு 13-ஆம் செயற்குழு வாழ்த்துகளைத் தெரிவித்து பலத்த கரவொலியுடன் வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சின் சிறப்புகள்: 13-ஆம் செயற்குழுவின் பொருளாளர் Babu Rishe கடந்த ஆண்டின் நிதி அறிக்கையை பகிர்ந்து கொண்டார், NTU தமிழ் இலக்கிய மன்ற சின்னம் வெளியிடு மற்றும் 14-ஆம் செயற்குழுவின் பணித்திட்டம் தெரிவிப்பு. அது மட்டுமா? மன்ற உறுப்பினர்கள் தங்கள் அர்ப்பணிப்புக்காக அங்கீகரிக்கப்பட்டனர். விளையாட்டுகள் மற்றும் மன்ற உறுப்பினர்களின் பாடல் அங்கம் சிறப்பாக அமைந்தது. NTU தமிழ் இலக்கிய முன்னாள் மாணவர் மன்றம் இந்நாளில் கலந்து மேலும் சிறப்பித்தனர். இவ்வாண்டில் நடைபெற்ற வருடாந்திர பொதுக்கூட்டம் நாவுறும் விருந்துடனும் நேசத்துக்குரிய நினைவுகளுடனும் எழிலக அமைந்தது.
